சமந்தா பவருக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி
உத்தேச தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சியின் நிர்வாகி சமந்தா பவருக்கு இன்று உறுதியளித்துள்ளார்.
ஆறு மாத அவகாசம்
தேர்தல் சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றம் உடன்பட வேண்டும். இதற்காக அவர்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் தரப்படும்.
அவர்கள் அதனை செய்யாவிட்டால், ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி, எந்த அமைப்பு வேண்டும் என்று நாட்டைக் கேட்கப் போவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகள் இதை என்றென்றும் தள்ளி வைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் சபை
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் விக்டர் ஐவன் ஆகியோரின் மக்கள் சபை என்ற கருத்தை முன்வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள்
தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.