இலங்கையில் முதலீட்டுக்கு தயாராகும் அமெரிக்கா - சமந்தா பவர்

Ranil Wickremesinghe United States of America Sri Lanka Government Economy of Sri Lanka
By Debora Sep 11, 2022 12:38 PM GMT
Report

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி உதவி திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.

இதன் போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பலத்தரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung), USAID திணைக்கள பிரதி பிரதம அதிகாரி சோனாலி கோர்டே (Sonali Korde) உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் முதலீட்டுக்கு தயாராகும் அமெரிக்கா - சமந்தா பவர் | Samantha Power President Meet

இலங்கையில் முதலீடு

இலங்கையின் முதலீட்டு சந்தர்ப்பங்களை அறிந்துக்கொள்வதற்காக அமெரிக்காவின் வியாபார சமூகத்துடன் இணைந்து செயற்படுவதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி உதவி திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முதலீட்டுக்கு தயாராகும் அமெரிக்கா - சமந்தா பவர் | Samantha Power President Meet

உதவித் திட்டங்கள்

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்காக மனிதாபிமான உதவியாக மேலும் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதாக சமந்தா பவர் உறுதியளித்துள்ளார்.

அரசியல் மறுசீரமைப்பு

அவர் மேலும் கூறுகையில், அரசியல் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரல்களுடன் அமெரிக்கா கைக்கோர்த்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

தற்போதைய அவசர நிலையால் இலங்கை மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பிலும், இந்தநிலையில் இருந்து மீள்வதற்கு அமெரிக்காவால் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்க முடியும் என்பது குறித்தும் சமந்தா பவர் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், இலங்கையின், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அமெரிக்கா வழங்கும் நீடித்த ஆதரவு குறித்தும் சமந்தா பவர் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

ஜனநாயகத்தைப் பலப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பவருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைக்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பிலும் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் தேவைப்படின் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“விவசாயிகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதற்கு அமெரிக்க அரசாங்கத்திற்கு முதலில் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

நாட்டில் உள்ள 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இதன் நன்மை சென்றடையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

22ஆவது திருத்தச் சட்டம்

இலங்கையில் முதலீட்டுக்கு தயாராகும் அமெரிக்கா - சமந்தா பவர் | Samantha Power President Meet

22ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை நாடாளுமன்றம் நிறைவேற்றும் வரை காத்திருக்கின்றோம். நிர்வாகத்துக்காக முதலாவது அமைச்சரவைக் கையேடு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைவாக அமைச்சரவையின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பிலான நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் கண்காணிப்புக் குழுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, ஐந்து இளைஞர் பிரதிநிதிகள் இவற்றுக்கு நியமிக்கப்படவுள்ளனர். இவர்களுக்குத் தலைவர் மூலம் கேள்விகளைக் கேட்க உரிமை உண்டு. உலகில் முதன் முறையாக இவ்வாறானதொரு நடைமுறை முன்னெடுக்கப்பட இருக்கின்றது. இளைஞர் நாடாளுமன்றத்தைச் சட்டபூர்வமாக்க இருக்கின்றோம். பொருளாதாரக் குழுக்களை அதிகரிக்க இருக்கின்றோம்.

அரச நிதி பற்றிய குழு, அரச கணக்குகள் பற்றிய குழு, அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, பொதுக் கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் தொடர்பான குழு, வங்கி மற்றும் நிதி பற்றிய குழு எனப் பல குழுக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான சட்டங்களுக்கு, நாங்கள் அங்கீகாரம் அளித்துள்ளோம்.

ஓரினச்சேர்க்கை

மேலும் பெண்கள் சமத்துவம் தொடர்பான சட்மூலமொன்றைத் தயாரிக்குமாறு பெண்கள் அமைப்புகளிடம் கேட்டுள்ளேன். ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் தனிநபர் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் அதை எதிர்க்காது. இதற்குத் தனிப்பட்ட உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். விவாகரத்துச் சட்டங்களை இலகுபடுத்தி பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய வாய்ப்பளிக்கப்படும்.

இலங்கையில் முதலீட்டுக்கு தயாராகும் அமெரிக்கா - சமந்தா பவர் | Samantha Power President Meet

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவோர் தொடர்பில் தமிழ்த் தரப்புடன் பேசினோம். தடுப்புக் காவலில் இருந்த காலம், அவர்கள் அனைவரும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது என்பவற்றை கருத்தில் கொண்டு, அவர்களை விடுவிக்க முடியுமா என்பதை அறிய பொறிமுறையொன்றைத் தயாரிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொலைகள் என்பவற்றுடன் தொடர்புபட்டவர்கள் தவிர ஏனையவர்கள் தொடர்பில் இதன் கீழ் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடுப்புக்காவலில் உள்ள முஸ்லிம்களில் விடுதலை செய்யக் கூடியவர்களை அடையாளம் காணுமாறு புலனாய்வுப் பிரிவுகளுக்கு அறிவித்துள்ளேன்.

குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை மதிப்பாய்வு செய்து, இந்த முழு விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு இங்கு வருமாறு ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னால் மறைகரம் இருந்ததா? அப்படியானால், அந்த மறை கரம் யாருடையது? சிலர் அமெரிக்கா என்கிறார்கள். சிலர் இந்தியா என்கின்றார்கள். இன்னும் சிலர் சீனா என்கிறார்கள். மற்றவர்கள் பாகிஸ்தான் என்கிறார்கள். அதனால் மறைகரம் எதுவென்று யாருக்கும் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு மேலும் விடுவிக்கக் கூடிய காணிகள் குறித்து ஆராயப்படுகின்றது.

காணாமல்போனோர் விவகாரம்

காணாமல்போனோர் விவகாரம் குறித்து தீர்வு காண துரிதப்படுத்தப்படும். புனரமைப்புத் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டு துரிதப்படுத்தப்படும். அத்தோடு வடக்கு அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றோம்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம், வடக்கு பாரிய பொருளாதார மையமாக மாற்றப்படும். அபிவிருத்திகள் ஊடாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை விட எமக்கு அப்பகுதிகளில் அதிகம் பங்காற்ற முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையும் கொண்டு வர இருக்கின்றோம்.

இலங்கையில் முதலீட்டுக்கு தயாராகும் அமெரிக்கா - சமந்தா பவர் | Samantha Power President Meet

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உடன்பாடு எட்டப்பட வேண்டும். இது தொடர்பில் கட்சிகள் ஆராய்ந்து வருகின்றன. அவர்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படாவிட்டால் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி, உகந்த தேர்தல் முறை தொடர்பாக மக்களிடம் விருப்பத்தை கோருவேன்.

அரசியல் கட்சிகளால் இந்தப் பிரச்சினைகளை என்றைக்கும் தள்ளிப் போட முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கிராம மட்டத்தில் மக்கள் சபை அமைப்பது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டத்திலும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி மக்கள் சபைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் எதிர்பார்க்கின்றோம். 2048 நமது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதனையொட்டி 2023இல் இருந்து 25 வருட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும்.

அதற்கு அமெரிக்காவின் உதவி அவசியாமானது என்று ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கை தொடர்பில் ஜனாதிபதி பைடன் செலுத்து வரும் அக்கறைக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தள்ளார். எமது அழைப்பை ஏற்று வருகை தந்தததற்கு சமந்தாவுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி அடுத்த வருடமும் இலங்கை வருமாறு அழைப்பை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாகி சமந்தா பவர்,

இலங்கைக்கு மேலும் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதாகவும் உறுதியளித்தார். ஆனால், தற்போது இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் இது மிக மிக சிறிய மற்றும் சாதாரண உதவியாகும் என்று சமபந்தா பவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எனினும், இந்த உதவிகள் சர்வதேச நிதி நிறுவனங்களின் தனியார் துறைக்கும், இலங்கையில் புதிதாக முதலீடுகளை செய்ய எதிர்பார்த்துள்ள முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும், புதிய அணுகுமுறைக்குத் தேவையான ஒரு உத்வேகமாக அமெரிக்கா இதன்மூலம் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

எமது கூட்டிணைக்கும் சக்தியை இதன்மூலம் திறமாகப் பயன்படுத்த முடியும் என்றும் சமந்தா பவர் மேலும் தெரிவித்தார். இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அவசர, இடைநிலைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இலங்கை ஸ்திரநிலைக்குத் திரும்புவதற்கும் ஆதரவளிக்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுதந்திர மற்றும் திறந்த இந்து - பசிபிக் பிராந்தியத்திற்கான இணைந்த, வளமான, நெகிழ்ச்சியான, பாதுகாப்பான உறுதியான ஆதவை அமெரிக்கா வழங்கும் என்றும் பவர் இதன்போது வலியுத்தினார்.

இந்தச் சந்திப்பில், அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிர்வாகி சமந்த பவர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் பணிக்குழாம் பிரதித் தலைவர் சோனாலி கோர்டே, அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் ஆசியப் பணியகத்திற்கான பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கவுர், அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் இலங்கை பணியகத்தின் பணிப்பாளர் கேப்ரியல் கிராவ், அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி அனாமிகா சக்ரவர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர் என்றுள்ளது.  

31ம் நாள் நினைவஞ்சலி

சுன்னாகம், திருச்சி, India, Brest, France

28 Oct, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திரியாய், முருகாபுரி, Pickering, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

மாதனை, கொழும்பு, Toronto, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, Untersiggenthal, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், Frankfurt, Germany

27 Nov, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ் நவாலி தெற்கு, Jaffna, பரிஸ், France, மெல்போன், Australia

21 Nov, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Neuilly-sur-Marne, France

23 Nov, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Vigneux-sur-Seine, France

24 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 2ம் வட்டாரம், கொழும்பு 6

09 Dec, 2023
மரண அறிவித்தல்

நெல்லியடி, New Malden, United Kingdom

19 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி, புலோலி தெற்கு, கொழும்பு

28 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், கற்சிலைமடு, Dartford, United Kingdom

01 Dec, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சரவணை கிழக்கு

24 Nov, 2024
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, Toronto, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

23 Nov, 2019
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று வடக்கு

23 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Nov, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US