ரணிலின் கைது ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவால்..! சஜித் பகிரங்கம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தனிப்பட்ட சம்பவம் அல்ல. அது மாறாக ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்ட மிகவும் வலுவான சவாலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(25) நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல அரசியல் கட்சிகளுடனும்
மேலும் தெரிவிக்கையில், "ரணில் விக்ரமசிங்கவின் கைது ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்ட மிகவும் வலுவான சவாலாகும்.
இந்தச் சவாலை எதிர்கொள்ள எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது மிகவும் முக்கியமானது.
இதன் பொருட்டு, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல அரசியல் கட்சிகளுடனும் குறுகிய கால மற்றும் நீண்டகால வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காகவே இந்தக் கலந்துரையாடல் கூட்டப்படுகின்றது." என்றார்.
இந்தக் கலந்துரையாடலில் பேசிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, "இந்தத் தருணத்தில் இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கான பதில்களைத் தேட வேண்டும்.
கட்சிச் செயலாளர்களின் பங்கேற்புடன்
முதலாவது ரணில் விக்ரமசிங்கவை விடுவிப்பதற்கான வேலைத்திட்டமாகும். இரண்டாவது நாட்டின் ஜனநாயக ரீதியிலான அரசியலுக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலை வெற்றி கொள்வதாகும்.
இதன் நிமித்தம், சகல அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட வேண்டும்." - என்றார்.
இதற்காக வேண்டி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என்று இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற சகல அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு நடவடிக்கை போலவே அரசின் சகல ஜனநாயக விரோத வேலைத்திட்டங்களுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை இங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
இதன் எதிர்காலப் பணிகளுக்காகக் கட்சிச் செயலாளர்களின் பங்கேற்புடன் ஒரு செயற்பாட்டுக் குழுவை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










