ரணில் மீண்டும் நாடாளுமன்றம் வருவது நல்லது! தயாசிறி எம்.பி. தெரிவிப்பு
"நெருக்கடி நிலையில் இருந்து ரணில் விக்ரமசிங்கவே நாட்டை மீட்டெடுத்தார். எனவே, அவர் மீண்டும் நாடாளுமன்றம் வருவது நாட்டுக்கு நல்லது என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
நெருக்கடி நிலை
"கடந்த கால அரசுகளை விமர்சித்து, 76 வருடகால சாபம் எனக் கூறியே தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்தனர். எனினும், என்.பி.பி. ஆட்சியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் என்ன?

76 வருட கால "சிஸ்டம்" முறையற்றது என விமர்சித்தவர்கள், அதைவிடவும் மோசமான “சிஸ்டத்தை” தற்போது செயற்படுத்தி வருகின்றனர்.
நாட்டில் கணக்காய்வாளர்கூட இல்லை. அதேவேளை, நெருக்கடி நிலையில் இருந்து ரணில் விக்ரமசிங்கவே நாட்டை மீட்டெடுத்தார்.
எனவே, அவர் மீண்டும் நாடாளுமன்றம் வருவது நாட்டுக்கு நல்லது. ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவது ஜனநாயக அரசியலுக்குச் சிறந்த விடயமாகும்."என குறிப்பிட்டுள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam