ஐ.தே.கட்சியில் புதிதாக இணைந்தவர்களால் ரணில் தவறாக வழிநடத்தப்படக்கூடாது - ராஜித
ஐக்கிய தேசிய கட்சியில் புதிதாக இணைந்தவர்களால் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தவறாக வழிநடத்தப்படக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன விடுத்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமீபத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்தவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டு ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியுடன் முரண்படக் கூடாது.
இதனை ரணில் விக்கிரமசிங்க அனுமதிக்கக்கூடாது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் 50 உறுப்பினர்களை எதிர்கொள்ள முடியாது.
விக்ரமசிங்க ஒரு சிரேஷ்ட்ட அரசியல்வாதியாக இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்வார். விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிரானவர்கள் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam