ஜனாதிபதி ரணில் - பிரதமர் மோடி டெல்லியில் சந்திப்பு
நீண்ட முயற்சியின் பின்னர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு எதிர்வரும் 21ஆம் திகதி இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
சரியாக ரணில் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருட நிறைவிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடும் முயற்சிகளுக்கு பின்னர் சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி ஒருவர் புதிதாகப் பதவியேற்றால் அவர் மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் இந்தியாவுக்கு என்பதே சம்பிரதாயமாக இருந்து வருகின்றது.
ஆனால், ரணில் ஜனாதிபதியாகி ஒரு வருடமாகியும் அது நடக்கவில்லை.
ஒரு வருடமாக அவர் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் ரணில். அந்த முயற்சி இப்போதுதான் சாத்தியமாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri