ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் தமிழர் தரப்பிற்கு ஏமாற்றம்!

R. Sampanthan Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis Charles Nirmalanathan
By Chandramathi May 15, 2023 08:00 PM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு-கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்றைய தினம்(15.05.2023) அதிகார பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில், கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய அதிகார பகிர்வு குறித்த இந்த கலந்துரையாடலில் எந்தவிதமான தீர்க்கமான நம்பிக்கை தரக்கூடிய விடயங்கள் எதுவும் உறுதிப்படுத்தபடாத நிலையில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கபூர்வமான தீர்மானம்

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் தமிழர் தரப்பிற்கு ஏமாற்றம்! | Ranil Meet North East Tamil Mps

அரசியல் யாப்பில் இருக்ககூடிய அதிகாரங்களை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்தி, மாகாண சபை தேர்தல்களை நடத்துவதன் மூலம் தான் ஒரு அரசியல் தீர்வுக்கான நம்பிக்கையை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்க முடியும் என்று தமிழ் தரப்பு தொடர்ச்சியாக தமது நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளது.

இதனடிப்படையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து, அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தபட்டன. பின்பு அவை இடைநிறுத்தபட்டது.

மீண்டும் அந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, இன்று அந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக அதிகார பகிர்வு சம்பந்தமாக தமிழ் தரப்புகளினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் யோசனை

இருப்பினும் ஜனாதிபதியின் சார்பில் அது தொடர்பான நிலையான செயற்பாடு தொடர்பில் எந்த உறுதிமொழியும் முன்வைக்கப்படாத நிலையில் இந்த பேச்சுவார்த்தை நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் தமிழர் தரப்பிற்கு ஏமாற்றம்! | Ranil Meet North East Tamil Mps

எனினும் இந்த அதிகார பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி, தான் ஒரு குழுவை அமைப்பதாகவும் அந்த குழுவில் தமிழ் தரப்பினரும் பிரதிநிதிகளாக இருப்பார்கள் எனவும் கூறியதுடன் அந்த குழுவினூடாக இந்த அதிகார பகிர்வு தொடர்பில் கலந்துரையாடி முற்றுமுழுதாக தீர்க்கமான அதிகார பகிர்வை நிறைவேற்ற முடியும் என்று ஜனாதிபதி கூறியதாக அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஏற்றுக்கொள்ளாத தமிழ் தரப்பு, ஏற்கனவே யாப்பிலிருக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்த குழு அமைப்பது கால நீடிப்பாக இருக்குமே தவிர ஆரோக்கியமாக இருக்காது என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எந்தவிதமான ஆக்கபூர்வமான தீர்மானமும் எடுக்காமல் இந்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. 

சுமந்திரனின் கருத்து

உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் புதிய அரசமைப்பு விரைவில் உருவாக்கப்பட வேண்டும். அதைவிடுத்து நிர்வாக விடயம் சம்பந்தமான பேச்சுக்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவது பிரயோசனமற்ற செயல் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துரைத்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறினார்.

மேலும் தெரிவிக்கையில்,"நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஆவணமொன்றை எடுத்து வந்து, சில விடயங்களை எடுத்துரைத்தார். ஜனாதிபதியிடமும் அந்த ஆவணம் இருந்தது. குறித்த ஆவணத்தில் எதிரணி வரிசையில் விக்னேஸ்வரன் மட்டுமே கையொப்பம் இட்டிருந்தார். ஏனையோர் ஆளுங்கட்சினர்.

அத்துடன், பிரதிநிதித்துவ அரசியல் அந்தஸ்த்து அற்றவர்களும் கையொப்பமிட்டுள்ளனர். இதற்கு நாம் எதிர்ப்பை வெளியிட்டோம். இதனை மக்கள் பிரதிநிதிகளின் ஆவணமாக எடுத்துகொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டோம்.

இந்த ஆவணத்தை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி குழுவொன்றை அமைக்கவும் முற்பட்டார். அதற்கு நாம் மறுப்புத் தெரிவித்தோம். அப்படியான குழுவொன்றை அமைத்தால் வெறுமனே பேச்சு நடத்தப்படுவது மட்டுமே இடம்பெறும், காத்திரமாக எதுவும் நடக்காது எனச் சுட்டிக்காட்டினோம். அதில் நாம் பங்கேற்கபோவதில்லை எனவும் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தோம்.

அத்துடன், உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் புதிய அரசமைப்பு விரைவில் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. அறிக்கைகள் உள்ளன. ஒரு வரைபுகூட உள்ளது. இதைச் செய்வதை விடுத்து, நிர்வாகம் சம்பந்தமான பேச்சுகளில் மட்டுமே ஈடுபடுவது பிரயோசனமற்றது.

புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கை. எனினும், இவை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை." என தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்தி-ராகேஷ்


     

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US