தேசிய அரசாங்கத்தின் பிரதமராக ரணில் பதவியேற்கத் தயார்!
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால், அந்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தயாராக இருப்பதாக ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardane) தெரிவித்துள்ளார்.
இதனை விடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக, அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்க ரணில் விக்ரமசிங்க தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) கம்பஹா மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ருவான் விஜேவர்தன கலந்துக்கொண்டார்.
இதன் போது, அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க உள்ளதாக பரவி வரும் வதந்திகள் சம்பந்தமாக செய்தியாளர் ஒருவர், ருவான் விஜேவர்தனவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri