55 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை இழந்த அரச ஊழியர்கள்! மீண்டும் அதிகாரத்திற்கு ரணில்..

Anura Kumara Dissanayaka Dr Rajitha Senaratne Ranil Wickremesinghe Government Employee Sri Lanka Government
By Benat Nov 01, 2024 12:38 PM GMT
Report

மக்கள் விரும்பினால் ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) மீண்டும்  அதிகாரத்திற்கு கொண்டு வர முடியும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அரச ஊழியர்கள் மாற்றுத் தெரிவை விரும்பியதன் காரணமாக 55ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை அவர்கள் இழந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆறு மாதங்களுக்கொருமுறை அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! அநுர அரசாங்கத்தின் பொய்

ஆறு மாதங்களுக்கொருமுறை அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! அநுர அரசாங்கத்தின் பொய்

சம்பள அதிகரிப்பு

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் அரச ஊழியர்களின் அடிப்படைச்சம்பளம் ஜனவரியில் நூற்றுக்கு 24 வீதமாக அதிகரிக்கும்.

55 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை இழந்த அரச ஊழியர்கள்! மீண்டும் அதிகாரத்திற்கு ரணில்.. | Ranil Is Back In Power

இதன் மூலம் புதிதாக அரச சேவையில் இணைந்துகொள்பவருக்கு அவரின் அடிப்படைச் சம்பளம் 55ஆயிரமாக அமையும். அதேபோன்று வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு 25ஆயிரமாக அதிகரிக்கப்படும். அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கும் போது மேலதிக நேர கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படுகின்றன.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தேர்தலை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டதல்ல. நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது வருடாந்தம் மேற்கொள்ளப்படும் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு இடம்பெறவில்லை.

அதனால் அவர்களுக்கான சம்பள அதிகரிப்பை முறையாக மேற்கொள்ள உதய செனவிரத்ன குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

அனுபவமற்ற பிரதமர் 

அந்த குழுவின் பரிந்துரைக்கமையவே ஜனவரி முதல் இரண்டு கட்டங்களாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளுக்கு அமைச்சரவையின் அனுமதியும் பெறப்பட்டது.

55 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை இழந்த அரச ஊழியர்கள்! மீண்டும் அதிகாரத்திற்கு ரணில்.. | Ranil Is Back In Power

தற்போதைய பிரதமருக்கு அரசியல் அனுபவம் இல்லை. அரச சேவையில் இருந்தவர் அல்ல. அவர் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டவர். அதனால் அவருக்கு அரச சேவை தொடர்பில் தெரியாது.

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட உதய செனவிரத்ன குழுவில் இருந்தவர்கள் யார் எனவும் தெரியாமல் பிரதமர் கதைக்கிறார். இதன் மூலம் அரச சேவை தொடர்பில் அவரின் புரிதலை விளங்கிக்கொள்ளலாம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றினார். மீனவர்களுக்கான உரிபொருள் மற்றும் விவசாயிகளுக்கான உர நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் காரணமாக அதனை வழங்குவதை தேர்தல் ஆணைக்குழு நிறுத்தி இருந்தது.

மீண்டும் அதிகாரத்தில் ரணில்

அநுரகுமார திஸாநாயக்க அதனையே தற்போது வழங்கி இருக்கிறார். மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானத்தை அவ்வாறே நிறைவேற்ற முடியும் என்றால், ஏன் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என கேட்கிறோம்.

55 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை இழந்த அரச ஊழியர்கள்! மீண்டும் அதிகாரத்திற்கு ரணில்.. | Ranil Is Back In Power

அரச ஊழியர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அடித்த புள்ளடி மூலம் 55ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை இழந்துள்ளனர். அதனால் நாடாளுமன்ற தேர்தலில் அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் ஆணை வழங்கினால் ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவோம்.

அதேபோன்று வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம். மக்கள் விரும்பினால் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவர முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுமா..!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுமா..!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US