ரணில் பிரதமராக பதவியேற்றமை ஜனநாயகத்திற்கு முரணானது: கஜேந்திரகுமார் எம்.பி

Gajendrakumar Ponnambalam Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe India
By Kanamirtha May 17, 2022 08:01 AM GMT
Report

முற்றுமுழுதாக மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்த ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவி ஏற்றமை அனைத்து ஜனநாயக விதிமுறைக்கும் முரணானதெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க அனுபவம் மிக்கவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அனுபவம் மிக்கவர் என்பதற்காக ஜனநாயகத்துக்கு எதிரான செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புக்களுடன் இணைந்து ஆட்சியை மாற்றியிருப்பதாக நாடகமாடுவதை ஏற்கமுடியாது.

ரணில் பிரதமராக பதவியேற்றமை ஜனநாயகத்திற்கு முரணானது: கஜேந்திரகுமார் எம்.பி | Ranil Inauguration Prime Minister Anti Democratic

ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்பதற்கு முதல் நாள் என்னைச் சந்தித்து எமது கட்சியின் ஆதரவைக் கோரினார்.

ஆனால் நான் அதனை மறுத்து விட்டேன். ரணிலின் கெட்டித்தனத்தை அரசாங்கம் பாவிக்க விரும்பினால் அதற்கென ஒருமுறை இருக்கின்றது.

இந்திய மற்றும் மேற்கு நாடுகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குக் கட்சிகள் தற்போது முனைப்புக் காட்டி வருகின்றன.

முதுகெலும்பில்லாத இந்திய அரசின் அடிவருடிகளான சிலதமிழ் கட்சிகள் விழுந்து விழுந்து ரணில் விக்ரமசிங்கவை வரவேற்று மக்களுக்கு உண்மையைச் சொல்லாது ஜனாதிபதி கோட்டாபயவை எதிர்க்கின்றோம் என பொய் கூறி மலசலம் கூடம் செல்வதற்குக் கூட ஜனாதிபதியிடம் கேட்க வேண்டிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டியது .

இந்திய அரசின் எடுபிடிகளாகச் செயற்படுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றது. அதேபோல ஒரு தரப்பு எங்களைத் தோற்கடிக்க தாங்கள் ஒரு தேசியவாதி என நடிப்பவர் அமைச்சர் பதவிகளையும் ஏற்பதாக அறிவித்திருக்கின்றார்.

சுமந்திரன் கொஞ்சம் நாசூக்காக அரசாங்கத்துடன் இணையமாட்டோம் என்றார். ஆனால் நாடாளுமன்றத்தில் உள்ள குழுவொன்றின் தவிசாளர் பதவியினை ஏற்பதாகக் கூறியிருந்தார்.

ஆனால் அதையும் தாண்டி பெரும் தேசியவாதியாகத் தன்னை காட்டுகின்ற விக்னேஸ்வரன் அமைச்சர் பதவி ஏற்கத் தயாராக உள்ளேன் என்கிறார். எனவே தமிழ் மக்கள் ஒன்றினை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ரணில் பிரதமராக பதவியேற்றமை ஜனநாயகத்திற்கு முரணானது: கஜேந்திரகுமார் எம்.பி | Ranil Inauguration Prime Minister Anti Democratic

இனப்படுகொலைகளை மேற்கொண்ட ராஜபக்ச தன்னுடைய குடும்ப ஆட்சியைப் பாதுகாப்பதற்கு மேற்கிற்கும் இந்தியாவுக்கும் சரணடைந்து இருக்கின்ற நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்தை வைத்து மேற்கும் இந்தியாவும் விரும்பும் வகையிலே தமிழ் அரசியல் கட்சிகள் இனப்படுகொலையாளியின் ஆட்சிக்கு முண்டு கொடுக்கப் போகின்றார்கள்.

கடந்த முறை கூட இவ்வாறு காப்பாற்றினர். அதேபோல இந்த முறை கோட்டாபய முதுகெலும்பில்லாத தமிழ் கட்சியுடன் இணைந்து மீண்டும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட நீதியைக் கோரி போராடுகின்ற தமிழ் மக்களுக்கு முகத்தில் அறையும் வகையில் அந்த தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெற்ற தமிழ் கட்சிகள் இன்றைக்கும் செயற்படுகின்றன.

முற்று முழுதாக மக்களால் நிராகரிக்கப்பட்டு தேசிய பட்டியல் ஊடாக வந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவி ஏற்றமை அனைத்து ஜனநாயக விதிமுறைக்கும் முரணானது என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US