ரணில் மொட்டுக்கட்சியை அணிகளாக பிரித்து விட்டார்-வசந்த யாப்பா பண்டார
ஜனாதிபதி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தி இரட்டைகுடிரிமை இரத்துச் செய்துள்ளதுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சில அணிகளாக பிரித்து விட்டதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மொட்டுக்கட்சியின் மீது தாக்குதலுக்கு மேல் தாக்குதல் நடத்துகிறார்

பொதுஜன பெரமுனவின் பாதுகாப்பாளராக தெரிவு செய்த ஜனாதிபதி தற்போது கட்சியின் மீது தாக்குதலுக்கு மேல் தாக்குதல்களை தொடுத்து கட்சி உடைத்து சிதறடித்து வருகிறார்.
மகிந்தவுடன் மீண்டும் எழுவோம் என்று கூறி களுத்துறை மற்றும் நாவலப்பிட்டி மேடைகளில் முன்வரிசையில் இருந்தவர்கள் தற்போது சில அணிகளாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் எதிராக செயற்பட்டு வருகின்றனர்.
22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது ஒரு அணி பசில் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்காமல் தவிர்த்துக்கொண்டது.
மற்றுமொரு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து வாக்களித்தது. இரட்டை குடியுரிமைக்கு ஆதரவு வழங்கும் சுமார் 25 பேர் அன்று வாக்களிக்கவில்லை.
பிளவுப்பட்டுள்ள ஒரு அணி மொட்டுக்கட்சியை யானையின் வாலில் அல்ல கழுத்தில் தொங்கவிட நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க தீர்மானித்தாக எங்கள் மீது குற்றம் சுமத்துவோர் எங்கள் மீது குற்றம் சுமத்தி கொண்டிருக்காது அடுத்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து யானை சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தற்காத்து கொள்ளும் கூறுகிறோம்.
இரட்டை குடியுரிமை பெற்ற 10 பேர் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர்

நாட்டின் பிரஜைகளாக பதவிப்பிரமாணம் செய்து, நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள இரட்டை குடியுரிமை கொண்ட சுமார் 10 பேர் நாடாளுமன்றத்தில் இருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரட்டை குடியுரிமை கொண்ட இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை வெளியிடுமாறு நாங்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். தூதரகங்களிடம் இந்த கோரிக்கை விடுக்கின்றோம். அப்போது இந்த இரட்டை பாத்திரங்கள் யார் என்பது நாட்டுக்கு தெரியவரும் எனவும் வசந்த யாப்பா பண்டார மேலும் தெரிவித்துள்ளனர்.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 11 மணி நேரம் முன்
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan