சாதித்துக் காட்டியுள்ளார் ரணில்: எதிர்க்கட்சி ரணிலுக்கு புகழாரம்
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெற்று சாதித்துக் காட்டியுள்ளார், எனவே தற்போது நாம் அனைவரும் முடிந்தளவு ஆதரவை வழங்கி இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் இவ்வாறு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பில் இன்று (22.03.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எதிர்க்கட்சி அரசுக்கு ஆதரவு
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் ஆதரவு வழங்க வேண்டும்.
இந்த உதவி கிடைப்பதையிட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடியாது என்று பலராலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், ஜனாதிபதி இந்த ஆதரவைப் பெற்று சாதித்துக் காட்டியுள்ளார்.
எனவே, தற்போது நாம் அனைவரும் முடிந்தளவு ஆதரவை வழங்கி இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

ஐபிஎல் இறுதிப்போட்டி மாற்றம்... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் News Lankasri

மேகன் உடனான திருமண உறவில் ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
