720 மில்லியன் ரூபாவை ரணில் அரசு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு
கடந்த அரசாங்கம் 720 மில்லியன் ரூபா மக்கள் நிதியை மோசடி செய்ததாக சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராக கட்சியின் தலைவர் டலஸ் அழகப்பெரும அறிக்கை ஒன்றை வெளியிட்டு, குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அதற்கமைய ரத்து செய்யப்பட்டு தேர்தல்களை நடத்துவதற்கான உத்தேச செலவு 8 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. எனினும் தேர்தல் ரத்துச் செய்யபட்டமையினால் 720 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி மோசடி
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஜனநாயக செயல்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது மட்டுமல்லாமல், பொது மக்கள் மீது நிதிச் சுமையையும் சுமத்தியது.
வரி செலுத்துவோர் நிதியை கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
ரணில் விக்கிரமசிங்க நிர்வாகத்தின் கீழ் நிதி முறைகேடுகள், பொது வளங்களை தவறாகப் பயன்படுத்துவதோடு தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட.தொடர்பான மற்ற குற்றச்சாட்டுகளையும் அக்கட்சி சுட்டிக்காட்டியது.
நெருக்கடியான நிலையில் பொருளாதாரத் தவறு செய்பவர்களுக்கு எதிராக சமகால ஜனாதிபதியும் அரசாங்கமும் எடுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.