மகிந்த தொடர்பில் சர்வதேச ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியினால் கடும் கோபமடைந்த ரணில் (VIDEO)
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்ட நிலையில் சர்வதேச ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விதம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் 8 ஆவது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட நிலையில்,கங்காராமை விகாரைக்கு சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து முதன்முதலில் ஊடகவியலாளர்களின் மத்தியில் கருத்து தெரிவித்த ஜனாதிபதியிடம் சர்வதேச ஊடகவியலாளரொருவர் நீங்கள் மகிந்த ராஜபக்சவின் நண்பரா என கேள்வியெழுப்பியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பு
இந்த கேள்வியினால் கோபமடைந்த ரணில் விக்ரமசிங்க நான் யாருக்கும் நண்பன் இல்லை.நான் பொது மக்களின் நண்பன்.இலங்கை அரசியல் தொடர்பில் சரியாக தெளிவில்லாமல் என்னிடம் கேள்வியெழுப்ப வேண்டாம் எனவும் கோபமாக பதிலளித்துள்ளார்.
இதன்போது அரசியல் குழப்பங்கள் தொடர்பில் கேள்வியெழுப்பிய மற்றுமொரு ஊடகவியலாளரிடம் நீங்கள் இலங்கை பிரஜையாக இருந்தால் மாத்திரம் இலங்கை அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கேள்வியெழுப்ப முடியும் எனவும் கோபமாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்று உடன் முதன்முதலில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ஊடகவியலாளர்களை இவ்வாறு புறக்கணித்து பதிலளித்துள்ளமை தற்போது பலர் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.