செப்டம்பர் 5 வரை இலங்கை அரசாங்கத்துக்கு அவகாசம்
2022, செப்டெம்பர் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 51ஆவது அமர்வில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் முன்வைப்பதற்கான 46/1 தீர்மானத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை இறுதி செய்யப்பட்டு ஆகஸ்ட் 26 அன்று, கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதை மதிப்பாய்வு செய்து கருத்து தெரிவிக்க செப்டம்பர் 5 திங்கள் வரை இலங்கை அரசாங்கத்துக்கு அவகாசம் உள்ளது.
காலவரையறைக்குள் அரசாங்கத்தின் பதிலை இலங்கை அனுப்பும் என வெளிவிவகார அமைச்சு தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த 12 மாதங்களில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள், நிறைவேற்றப்படாமை குறித்து இந்த அறிக்கை கடுமையாக சாடியுள்ளது.
புதிய வெளியுறவுக் கொள்கை
மே 9 அன்று போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் அவர்களுக்கு
எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை,பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்
போராட்டத் தலைவர்களை ‘தன்னிச்சையாக’ கைது செய்தல் மற்றும் பயங்கரவாதத் தடைச்
சட்டத்தைப் பயன்படுத்தல் போன்ற விடயங்களும் இந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளன.
இதற்கிடையில் வெளிவிவகார அமைச்சர் சப்ரி இந்த வாரம், அரசாங்கத்தின் புதிய வெளியுறவுக் கொள்கை நோக்கங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் விளக்கமளித்ததாக அறியமுடிகிறது.
புதிய கொள்கை மாற்றத்திற்கு
அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவத்தை இது குறிக்கிறது.
எனினும் அரசாங்கத்தின் புதிய கொள்கை முயற்சிகளுக்கு தமிழ் புலம்பெயர்
குழுக்களிடமிருந்து முன்னேற்றமான பதில் கிடைக்க வாய்ப்பில்லை. அவர்களில்
சிலர் அரசாங்கத்தின் நம்பகத்தன்மை என்று கூறுவது குறித்து சந்தேகம்
கொண்டிருப்பதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.