தேசிய பாதுகாப்பு குறித்து விரிவாக மீளாய்வு செய்யப்படும்: ரணில்
தேசிய பாதுகாப்பு தொடர்பில் விரிவாக மீளாய்வு செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பூசா கடற்படை முகாமில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு
பொருளாதார மாற்றங்கள் காலநிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தேசிய பாதுகாப்பு கொள்கைகள் மீளாய்வு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நவீன பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக பொருளாதார மேம்பாடுகள் மற்றும் காலநிலை அனர்த்தங்கள் உள்ளிட்ட காரணிகளையும் உள்ளடக்கி தேசிய பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்யப்பட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த பணிகளை ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் சன்ன குலத்திலக்க தலைமையில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |











ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 5 மணி நேரம் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
