ஊழல் நிறைந்ததே ரணிலின் வெற்றி! அனைத்தும் மக்களின் பணம்: மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாட்டாளர் ஆதங்கம்(Video)
தற்போதைய அரசாங்கத்தை பார்க்கும் போது கோட்டாபய ஆட்சியை நிலைநிறுத்த வந்தவராகவே ரணில் செயற்படுகிறார் என மனித உரிமை ஆணைக்குழுவின் வடக்கு கிழக்கு செயற்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களால் கோட்டாபய விராட்டபட்ட போது தனது ஆசனத்தை தக்க வைத்துக்கொள்ள ரணிலை நியமித்தார். நாடாளுமன்றில் தேர்தல் நடைபெறும் போது ராஜபக்சக்களின் கட்சியினர் ரணிலுக்கு ஆதரவளித்ததோடு சிலர் கடைசி நேரத்தில் விலை போனார்கள். அவை அனைத்தும் மக்களின் பணம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை “ராஜபக்சக்கள் இணைந்து நாட்டையும் நாட்டு மக்களையும் மோசமான நிலைக்கு கொண்டு சென்றனர். அவர்களை மக்கள் இணைந்து நாட்டை விட்டு விரட்டி அடித்தனர். ஆனால் ராஜபக்சக்களின் நிழலாட்சி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.
ரணில் ஆட்சிக்கு வந்த உடனே கோட்ட கோ கம போராட்டக்காரர்களை தாக்கி போராட்டத்தை மழுங்கடித்தார். தற்போது மறைந்திருந்தவர்களை மீண்டும் வெளியில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்”என பொது மகன் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.