பிரதமராக பதவியேற்றார் ரணில் - இந்தியா வெளியிட்டுள்ள நம்பிக்கை
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், அரசியல் ஸ்திரதன்மை ஏற்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாக இந்திய அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ளி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரபூர் ட்விட்டர் பக்கத்தில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கையில் ஜனநாயக வழிமுறைகளின்படி பிரதமர் பதவி ஏற்றுள்ளார். இதன் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பிரதமராக கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்துபணியாற்ற எதிர்பார்த்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கைகொள்கின்றது.
— India in Sri Lanka (@IndiainSL) May 12, 2022
இதேவேளை, இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்தது.
குறித்த போராட்டம் கடந்த 9ம் திகதி வன்முறைாயக மாறியதை தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். இந்நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், இலங்கைக்கு தங்களின் ஆதரவு தொடரும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.