முதலில் நாட்டை மீட்போம்! அதன் பிறகு அரசியல் செய்வோம்: ரணில் -செய்திகளின் தொகுப்பு
அதிமேதகு என்ற சொற்பதத்துக்கு தடை விதிக்கின்றேன் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட அறிவிப்பிலேயே ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
”நாம் வாழ்வதற்கும், அரசியல் செய்வதற்கும் நாடு அவசியம்.
எனவே, நாடு குறித்தும் மக்கள் பற்றியும் சிந்தித்து செயற்படுமாறு கட்சிகளிடம்
கேட்டுக்கொள்கின்றேன். முதலில் நாட்டை மீட்போம். அதன் பிறகு அரசியல் செய்வோம்.
மேலும், ஜனாதிபதியை விளிக்கும்போது, இனி ‘அதிமேதகு’ என்ற சொல்லை பயன்படுத்த வேண்டியதில்லை. நாட்டுக்கு தேசியக்கொடி மட்டும் போதும், இன்று முதல் ஜனாதிபதி கொடி இரத்து செய்யப்படுகின்றது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களையும் மற்றும் பல செய்திகளையும் இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,