ரணிலின் கைதினை விமர்சித்துள்ள திலித் ஜயவீர
ரணில் விக்ரமசிங்கவின் அரசியலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் இந்த நாட்டின் ஒரு ஜனாதிபதிக்கு இவ்வாறு செய்வது தவறு என்று நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இன்று (23) மதியம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சிறையில் சந்தித்துவிட்டு திரும்பிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரமசிங்கவின் சிறைவாசம்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
"அவர் கிரிக்கெட் விளையாடச் சென்றார், ஆனால் இந்த அரசாங்கம் எல்லே விளையாடுகிறது.பந்தால் உடம்பில் அடித்துவிட்டு அவுட் என்கின்றனர்.
எனது அரசியல் வாசிப்பின்படி, இது நமது நாட்டை அரசியலில் ஒரு புதிய திசைக்கு அழைத்துச் செல்லும் ஒரு சம்பவமாக இருக்கும்.
நீதிமன்றம் செய்தது சரியா? தவறா? என்று நான் கூறவரவில்லை.
நீதிமன்ற செயற்பாடுகளுக்கு முன்னர் செய்யப்பட்டுள்ள அந்த விசாரணையின் விதம் நமது நாட்டின் பிம்பத்திற்கு நல்ல படத்தை வரையவில்லை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறைவாசம் இலங்கையின் அரசியல் திசையை வேறு திசையில் கொண்டு செல்லும் ஒரு சம்பவம் என குறிப்பிட்டுள்ளார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

தமிழ்நாட்டில் கூலி இதுவரை செய்துள்ள வசூல்.. அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முறியடிக்குமா Cineulagam
