நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் சிறை செல்ல வேண்டி ஏற்படும்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்குமாறு விடுக்கப்பட்ட உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், நாளைய தினம், ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட இருக்கின்ற நிலையில், அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் விமர்சிப்பதும் நீதித்துறையை அவமதிப்பதற்கு சமமானது என எச்சரிக்கப்ட்டுள்ளது.
அத்துடன், நாளைய தினம் நீதிமன்றத்திற்கு முன் போராட்டமோ அல்லது குழப்பநிலையோ ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அரசாங்க தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பல முக்கிய தகவல்களை வழங்குகின்றார், தேசிய மக்கள் சக்தியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் த.கா. ஐன்ஸ்டீன்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



