மீண்டும் இணைந்துள்ள ரணிலும், கரு ஜயசூரியவும்!

Parliament of Sri Lanka Karu Jayasuriya Ranil Wickremesinghe
By Amal Jun 06, 2022 07:59 AM GMT
Report

ரணிலும் கருவும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இணைந்து புதிய நாடாளுமன்ற குழுக்களை அமைப்பது தொடர்பில் இணக்கத்தை எட்டியுள்ளனர்.

பிரதமர் தம்முடன் கலந்துரையாடியதாகவும், இதனையடுத்து நாடாளுமன்றக் குழுக்களில் இணைந்து செயற்பட சம்மதித்ததாகவும் ஜெயசூர்யா கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மீண்டும் இணைந்துள்ள ரணிலும், கரு ஜயசூரியவும்! | Ranil And Karu Reach Consensus

தேசியப்பட்டியலில் கரு

முன்னதாக மகிந்த ராஜபக்சவுக்குப் பதிலாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தேசியப் பட்டியல் மூலம் பிரதமராக நியமிக்கப்படுவார் என்று செய்திகளும் ஊகங்களும் வெளியாகியிருந்தன.

எனினும், ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் மூலம் அந்த ஊகம் நிராகரிக்கப்பட்டது.

இந்தநிலையில் தாம், தலைவராக இருக்கும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம், ஜனநாயகத்திற்காக பணிசெய்கிறது என்றும், அது நாடாளுமன்றம் மற்றும் அரச நிறுவனங்களை ஜனநாயகப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் என்றும் ஜயசூரிய கூறியுள்ளார்.

இதன் விளைவாக, நாடாளுமன்றக் குழுக்களில் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு பிரதமரின் அழைப்பை தமது சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஏற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

சில குழுக்களில் கோட்டா கோ கம பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என பிரதமரிடம் கூறியதை தானும் ஏற்றுக்கொண்டதாக ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்ட 15 நாடாளுமன்றக் குழுக்களில் தலா நான்கு இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க பிரதமர் அண்மையில் முன்மொழிந்திருந்தார்.

மீண்டும் இணைந்துள்ள ரணிலும், கரு ஜயசூரியவும்! | Ranil And Karu Reach Consensus

கோட்டா கோ கம

அதில் ஒன்று இளைஞர் நாடாளுமன்றத்தால் அமைக்கப்படும். மற்ற மூன்று குழுக்களும் எதிர்ப்புக் குழுக்கள் மற்றும் பிற ஆர்வலர் குழுக்களைச் சேர்ந்தவர்களை கொண்டு அமைக்கப்படும் என்றும் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரதமர் சார்பாக GGG( கோட்டா கோ கம) பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அத்தகைய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படவில்லை என்று ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் இணைந்துள்ள ரணிலும், கரு ஜயசூரியவும்! | Ranil And Karu Reach Consensus

பிரதமருடன் அரசியல் ஒப்பந்தம் எதுவும் இல்லை என்றும், நாடாளுமன்றக் குழுக்களுடன் மட்டுமே தமது பங்களிப்பு இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US