அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பில் மொட்டுக் கட்சியை புறக்கணிக்கும் ரணில்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு மத்தியிலும் அமைச்சரவையை மேலும் விரிவாக்குவதில்லை என்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ் பி திசாநாயக்க போன்றவர்களை உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஜனாதிபதி தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறார். இந்தநிலையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான வழிகளை ஆராயுமாறு திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிக்கன நடவடிக்கை
எனினும் அமைச்சரவை விரிவாக்க நடவடிக்கையானது பொதுமக்களின் பார்வையில் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதியின் தரப்பு கருதுகிறது.
தற்போதைய பொருளாதார நிலையில், அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறான நிலையில், அமைச்சரவையின் அளவு மேலும் அதிகரிக்குமானால் மக்கள் செல்வாக்கை இழக்க நேரிடும் என ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

கஜேந்திரனுக்கு நேர்ந்த கதியே நாளை சுமந்திரன் - சாணக்கியனிற்கு இடம்பெறலாம்! பகிரங்க எச்சரிக்கை! (video)
தற்போது 22 அமைச்சரவை அமைச்சர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தாலும், 30 பேர் கொண்ட அமைச்சரவையை ஜனாதிபதி நியமிக்க அரசியலமைப்பில் இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




