ரஞ்சன் ராமநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை அவதூறு செய்யும் வகையில், ரஞ்சன் கருத்து வெளியிட்டரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவிடம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். சிவில் செயற்பாட்டாளராக நாமல் குமார இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
இந்த விடயம் தொடர்பில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் ஏற்கனவே நாமல் குமாரவிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
கர்தினாலை அவமரியாதை செய்யும் வகையில் ரஞ்சன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பான ஒலிப்பதிவுகள் தம்மிடம் உள்ளதாக நாமல் குமார தெரிவித்திருந்தார்.
நாமல் குமார தொடர்பில் விசாரணை நடத்துமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் நாமல் குமாரவிடமும் மேலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri
