தாயுடன் பாலத்தை கடக்க முயன்ற 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி
காலி - நெலுவ பகுதியில் ஆற்றின் பாலத்தினை கடக்க முற்பட்ட சிறுவனொருவர் நீரில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளார்.
நெலுவ - எம்பலேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 8 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடும் மழையால் நெலுவ பகுதியில் ஆற்றின் பாலத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில்,அதனை சிறுவன் கடக்க முற்பட்ட போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாயொருவர் நேற்றைய தினம் அவரது 4 பிள்ளைகளுடன் சென்ற போது பாலத்தைக் கடக்க முற்பட்ட போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை,நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகப் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பு, களுத்துறை, கண்டி, பதுளை, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகையால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
