ஹட்டன் நகரில் திடீர் பரிசோதனை: முறைகேடான உணவுகள் கண்டுபிடிப்பு
ஹட்டன் பிரதான நகரில் உள்ள உணவகங்கள் , மரக்கறி விற்பனை நிலையங்கள் மற்றும் இதர வர்த்தக நிலையங்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த சோதனை நடவடிக்கை நேற்று(1) ஹட்டன் டிக்கோயா நகரசபையின் வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அம்பகமுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது திகதி காலாவதியான உணவு பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய சுகாதார நடை முறைகளை பின்பற்றாத பலசரக்கு விற்பனை நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
எச்சரிக்கை
இதனையடுத்து, உணவக ஊழியர்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் எடுத்துரைத்ததுடன் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களின் உரிமையாளர்கள் சிலருக்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.

இதில் திகதி காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த உணவகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கு பொது சகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri