சுமூகமான சூழ்நிலையில் நோன்புப் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்கள்! ஜனாதிபதி வாழ்த்து
முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில், இந்த வருட நோன்புப் பெருநாளை கொண்டாடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நோன்பு பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இந்த மாற்றம் அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது உறுதியாகும். ரமழான் காலம் மற்றும் நோன்புப் பெருநாள் என்பன மதிப்பு மிக்க மத, ஆன்மீக மற்றும் சமூக அமைப்பைக் கொண்டுள்ளன.
அந்த விழுமியங்களையும் பாதுகாத்து நேர்மையாக நோன்பு நோற்று முஸ்லிம்கள் தம்மை அர்ப்பணிக்கின்றனர்.
சமாதானம் மற்றும் சகோதரத்துவம் கொண்ட வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கும் பணிகளின் போது, இந்த சமூகக் கோட்பாடுகள் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பதோடு அவற்றை சமூக நலனுக்காக பயன்படுத்த அனைவரும் உறுதி பூண வேண்டும் என கூறியுள்ளார்.
மஹா சிவராத்திரி 2026 நேரலை
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan