றம்புக்கண துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் அம்பலமான விடயம்
றம்புக்கணையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின்போது துப்பாக்கி சூட்டை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டவர் தென்பகுதியின் அம்பலாந்தோட்டையை சேர்ந்தவர்.
அவர் அரசியல் ஆதரவிலேயே சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
குறித்த அதிகாரி சம்பவத்துக்கு முன்னர் , பிரதேச அரசியல்வாதியுடன் தொடர்புகொண்டதாகவும் பின்னர் குடிபோதையிலேயே துப்பாக்கி சூட்டை நடத்துமாறு உத்தரவிட்டதாகவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் தற்கொலைதாரி சஹ்ரான் ஹாசிமின் வாகனத்தை சரத் வீரசேகர பெற்றிருந்த போதும் அவரது மகனே அதனை பயன்படுத்தியதாக நாணயக்கார தெரிவித்தார்.
இதேவேளை தற்கொலை குண்டுதாரியான இப்ராஹிம் வாகனத்தை புலனாய்வு துறையில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் பயன்படுத்தி வருவதாகவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.



