பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாது: ரம்புக்கனை கலவரம் தொடர்பில் நாமல் வெளியிட்ட தகவல் (PHOTO)
எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாக அமையாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Whichever side we are on, we must all agree that violence is not the way to solve anything! Our country has seen enough! We must protect peace at all costs! I urge authorities & protestors a like to not give into violence & stop this escalating any further! @SL_PoliceMedia
— Namal Rajapaksa (@RajapaksaNamal) April 19, 2022
நாம் எந்த பக்கத்தில் இருந்தாலும் வன்முறை பிரச்சினைனகளுக்கு தீர்வு கிடையாது எனவும்,நமது நாடு போதியளவு வன்முறைகனை சந்தித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லா நேரங்களிலும் சமாதானத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரிகளும் போராட்டக்காரர்களும் வன்முறை வழியில் செல்ல வேண்டாம் என தாம் கோரிக்கை விடுப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
    
    
    
    
    
    
    
    
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam