ஒட்டுசுட்டானில் கூட்டுறவு சங்கத்திற்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் 14 ஆம் கட்டடைப்பகுதியில் காட்டுயானையின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வீடுகளில் நெல்மூடைகளை வைத்திருக்கமுடியாத நிலை உள்ளதாகவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் வீடு ஒன்றிற்குள் புகுந்த காட்டுயானை நெல்பைகளை உண்டு நாசம் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று(03.07.2026) அதிகாலை வேலை ஒட்டுசுட்டான் 14 ஆம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாளர் கூட்டுறவு சங்கத்திற்குள் புகுந்த காட்டுயானை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட அறையின் கதவினை உடைத்து துவம்சம் செய்துள்ளது.
சிறுபோக அறுவடை
அத்தோடு, அங்கிருந்த 6பை நெல்லினை எடுத்து உண்டு நாசப்படுத்தியுள்ளது. இதனால் சுமார் மூன்று இலட்சம் ரூபாவரையும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது பிரதேசத்தில் சிறுபோக அறுவடை இடம்பெற்று வரும் நிலையில் காட்டுயானையினால் நாளாந்தம் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரகித ராஜபக்ச மற்றும் சரித் உள்ளிட்ட மூவர் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam