றம்புக்கண துப்பாக்கி சூடு : விசாரணைக்காக மூவர் கொண்ட குழு நியமனம் -செய்திகளின் தொகுப்பு (Video)
றம்புக்கணையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
இதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழு ஒன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்து ரம்புக்கனையில் மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியா காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,