ரம்புக்கனை கலவரம்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கான காரணம் வெளியானது
ரம்புக்கனையில் ஏற்பட்ட கலவரத்தின் போது போராட்டக் காரர்கள் பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியைத் தொடர்ந்தே பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் மோதல் ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கேகாலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் ஆபத்தாக உள்ள நிலையில், அவர்கள் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு பவுசர் மற்றும் முச்சக்கர வண்டிக்கு தீ வைக்க முயற்சித்ததாகவும், பின்னர் கூட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியதாகவும் நிஹால் தல்துவ கூறினார்.





பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam
