றம்புக்கண சம்பவம்: மூன்று பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், றம்புக்கனை பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் றம்புக்கண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
றம்புக்கண சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர், சாட்சியாளர்களிடம் சுயாதீன விசாரணைகளை நடத்தவும் நீதிமன்ற விசாரணைகளில் கலந்துக்கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே றம்புக்கனை ஆர்ப்பாட்டகாரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டும் சிலர் காயமடைந்தமை சம்பவந்தமான விசாரணைகளை பொலிஸ் மா அதிபர் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்.

பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள் News Lankasri