றம்புக்கண கலவரத்தில் உயிரிழந்த சமிந்தவின் வீட்டின் முன்னால் ஒன்றுகுவிந்த பொது மக்கள் (Video)
றம்புக்கண பகுதியில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சமிந்த லக்ஷானின் வீட்டின் முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சமிந்த லக்ஷானின் வீட்டின் முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் கோஷங்களை எழுப்பி, தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
றம்புக்கண பகுதியில் கடந்து இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற போராட்டத்தின் போது எரிபொருள் பௌசருக்கு தீ வைக்க முற்பட்டனர் என தெரிவித்து பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சமிந்த லக்ஷான் என்பவர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த சம்பவம் இலங்கையில் மாத்திரம் அல்லாமல் சர்வதேச ரீதியிலும் பேசப்பட்டதுடன், கடும் கண்டனங்களும் வெளியிடப்பட்டன.
குறித்த கோர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் தற்போது விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது சமிந்த லக்ஷானின் வீட்டின் முன்னால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.