இந்திய கடற்படையின் தாக்குதல் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் வெளியிட்ட அறிக்கை
இந்திய கடலோர காவல்படையினர் பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் இலங்கை மீனவர்கள் குழு மீது தாக்குதல் நடத்தியதற்கு மீன்பிடித்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தாக்குதல் தொடர்பாக இன்று (02.01.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், தாக்குதல் குறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலதிக நடவடிக்கைகள்
வென்னப்புவ மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த 12 மீனவர்கள் கடந்த 29 ஆம் திகதி இலங்கை கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினரால் தாக்கப்பட்டனர்.
சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடித்துவிட்டு இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் சுயாதீன விசாரணையை நடத்த வேண்டும் என்று அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டைரோன் மெண்டிஸ் அறிவித்துள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam