ராஜீவ் காந்தி கொலை! சிங்களவர்கள் விடுதலைப் புலிகள் குறித்து தெரிவித்த விடயம் - காலம் கடந்த தகவல் (Video)
ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டமை மகிழ்ச்சியான விடயம் என இலங்கை சமூகவியலாளர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி உட்பட 6 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த விடயம் குறித்து லங்காசிறியுடன் சமூகவியலாளர்கள் சிலர் தமது கருத்துக்களை பகிர்ந்திருந்தனர்.
இதன்போது சமூகவியலாளர் சுப்ரமணியம் மேலும் கூறுகையில், “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவிலுள்ள தலைவரொருவரை அநாவசியமாக கொலை செய்துள்ளது. இவர்கள் இப்படியே வளர்ந்தால் இலங்கையிலும் இவ்வாறான விடயங்கள் தான் நடக்கும்.
அதனால் தான் நாம் அவர்களை எதிர்க்கிறோம். அந்த அமைப்பினை அரசியல் ரீதியாக கொண்டு செல்வதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இவ்வாறான வெறிச்செயல்களை செய்வதை தான் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்” என சிங்களவர்கள் பலர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட காலகட்டத்தில் தன்னிடம் தெரிவித்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri