பெண் விடுதலைப் புலி சுபாவுடன் நளினிக்கு என்ன வேலை..! ஆதாரத்தை பட்டியலிடும் முன்னாள் பொலிஸ் அதிகாரி
ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தின் போது மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்த அன்றைய இரவு நளினிக்கு அந்த இடத்தில் என்ன வேலை என முன்னாள் ஏ.டி.எஸ்.பி. (முன்னாள் பொலிஸ் அதிகாரி) அனுசுயா சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நான் பொய் சாட்சியம் கூறியதாக நளினி கூறுகிறார். நளினி ஸ்ரீபெரும்பதூரைச் சேர்ந்தவரா?
மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்த அன்றைய இரவு 10.20 மணிக்கு நளினிக்கு அந்த இடத்தில் என்ன வேலை.
பத்திரிகைகளில் வெளியான புகைப்படங்கள்
பெண் விடுதலைப் புலி சுபா உடன் அவர் அமர்ந்திருந்த புகைப்படங்கள் பத்திரிகைகளின் வெளியாகியுள்ளன.
சுபாவுடன் நளினிக்கு என்ன வேலை? ஆனால் நளினி பொய் சொல்கிறார்.
விழா நடக்கும் இடத்திற்கு தான் வரவே இல்லை, இந்திரா காந்தியின் சிலைக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்தேன் என நளினி கூறியுள்ளார் என அனுசுயா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ராஜீவ் காந்தி கொலை சம்பவம் இடம்பெற்ற நிகழ்வில் பதிவு செய்யப்பட்டு பத்திரிகைகளில் வெளியான புகைப்படங்களையும் சுட்டிக்காட்டி அனுசுயா சரமாரி கேள்விகளை தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
