இருட்டறையில் விசாரிக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கு! பழ.நெடுமாறன்
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமைக்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என திட்டமிடப்பட்டு பொய்யான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டதாக தமிழ்த் தேசியவாதியும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 26 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதில் 13 இந்தியத் தமிழர்கள், 13 ஈழத்தமிழர்கள். திட்டமிடப்பட்ட ஒரு கொலைச் சதியில் சரிசமமானவர்கள் இருந்துள்ளார்கள் என்பது நம்பமுடியாது.
மேலும் ,ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கு தடா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருட்டறையில் விசாரணை நடத்தப்பட்டதாகவும்,சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இதுவரை விசாரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தேசிய இன விடுதலை போராட்டம் தமிழகத்திலும் ஏற்பட்டு விடும் என்ற பயத்தில் பொய்யாக விடுதலை புலிகள் மீது குற்றம் சுமத்தி தமிழ் நாட்டில் தமிழீழ ஆதரவு என்ற உணர்வு இருக்க கூடாது என்பதற்காகவே விடுதலை புலிகள் மீது பொய் வழக்கு சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,