நாட்டின் வங்கி கட்டமைப்பிலும் டொலர் இல்லை - ராஜித சேனாரத்ன
இலங்கை தற்போது வங்குரோத்து நிலைமையை அடைந்துள்ளதாகவும், அரசாங்கத்திடம் டொலர் கையிருப்பில் இல்லை என்பது நாட்டின் அடிப்படையான பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தனது இல்லத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் இந்த நிதி நிலைமை காரணமாக அரசாங்கம் அனைத்து இடங்களிலும் கடனை பெற்று வருவதுடன் சகல இடங்களிலும் பிச்சை எடுத்து வருகிறது.
தற்போது பங்களாதேஷிடம் கடனை பெற்றுக்கொண்டுள்ள அரசாங்கம் விரைவில் மாலைதீவிடமும் கடனை பெறக் கூடும்.
நாட்டின் வங்கி கட்டமைப்பிலும் டொலர் இல்லை. வங்கிகள் நஷ்டமடைந்து வருகின்றன.
இந்த நிலையில் அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே வழி நாட்டின் வளங்களை விற்பனை செய்வதாகும் என குறிப்பிட்டுள்ளார்.