ராஜித தொடர்ந்தும் தலைமறைவு! நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு
கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
கொழும்பு பிரதான நீதிவானிடம் நேற்று(26) இந்த மனுவைத் தாக்கல் செய்த இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, ராஜித சேனாரத்னவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 30 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யக் கோரியுள்ளது.
முன்னதாக, இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ராஜித சேனாரத்னவைக் கைது செய்யப் பிடியாணை பிறப்பித்தது.
தொலைபேசி இணைப்புகள் நிறுத்தம்
இந்தநிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவரது தொலைபேசி இணைப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், அவர் வேண்டுமென்றே கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வருகின்றார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
