பொதுஜன பெரமுனவில் ஏற்படவிருந்த பிளவுகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல்
37 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஏற்படவிருந்த பிளவுகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த 37 பேரில் பெரும்பாலானோர் பசில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்களாவர்.
அவரே பொதுஜன பெரமுனவின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பின்னணியில் இருப்பவர். இந்தநிலையில் அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்னர் தமது கட்சியை இலங்கையின் ஆளும் கட்சியின் முக்கிய கட்சியாக நிலைநிறுத்துவதில் அவர் வெற்றிக் கண்டுள்ளார்.
இராஜாங்கஅமைச்சு பதவிகள்
அதேநேரம் நாடாளுமன்றத்தில் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரை கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வேறு தெரிவுகள் இல்லை என்ற அடிப்படையில், குற்றச்சாட்டுக்களால் கறைபடிந்தவர்களுக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அரசியலமைப்பின்படி இராஜாங்க அமைச்சுக்களின் உச்சவரம்பு 40 என்ற அடிப்படையில் இன்னும் சிலரை நியமிக்க வேண்டியுள்ளது. எனினும் அமைச்சரவையில் இன்னும் பல வெற்றிடங்கள் உள்ளன.
அமைச்சு பதவிகளுக்கு ராஜபக்ஷர்கள்
இந்தநிலையில் ஏற்கனவே இராஜாங்க அமைச்சு பதவியில் ராஜபக்சர்களில் ஒருவரான சசீந்திர ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அமைச்சரவையில் மற்றுமொரு ராஜபசவை ஏற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று
தெரிவித்துள்ளது.
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan