மக்கள் யார் பக்கம் என்பதை தேர்தலில் காண்பிப்போம்: ராஜபக்சக்களின் சகா சூளுரை
தேர்தலொன்று நடக்கட்டும் மக்கள் யார் பக்கம் என்பதைக் காண்பிப்போம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்த்தன சூளுரைத்துள்ளார்.
சனல் – 4 வீடியோ போன்ற சூழ்ச்சிகள் மூலம் ராஜபக்சக்களினதோ அல்லது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினதோ அரசியல் பயணத்தைத் தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியதாவது, கோட்டாபய ராஜபக்சவை வெற்றி பெற வைக்கவே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் திட்டமிடப்பட்டதாம் எனக் கூறப்படுகின்றது.
ஜே.வி.பி தேசியப் பட்டியல் வேட்பாளர்
2019 இல் தான் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்பட்டது, ஆனால் 2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் அமோக வெற்றியைப் பதிவு செய்து விட்டோம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்த கையோடு மொட்டுக் கட்சி அல்ல, நாட்டு மக்கள் தான் கோட்டாபய ராஜபக்சவைக் கோரினர். இதுதான் உண்மை.
அதேவேளை, சனல் – 4 திரைப்படம் இப்ராஹிம் என்பவரை ஏன் மறந்தது? இப்ராஹிம் என்பவர் ஜே.வி.பியின் தேசியப் பட்டியல் வேட்பாளராக இருந்தார்.

அவரின் இரு மகன்மார் தற்கொலை குண்டுதாரிகள். இந்த விடயம் ஏன் மறக்கப்பட்டது? இப்படியான நகர்வுகள் மூலம் எமது அரசியல் பயணத்தைத் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையை 'சிவப்புக் கோடு' என்று அறிவித்த ஈரான்
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam