டக்ளஸ், கருணா, பிள்ளையானின் கனவுகள் கலைந்தது! இராணுவ முக்கியஸ்தருக்கு அச்சப்படும் ராஜபக்சக்கள் (VIDEO)
கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியை கண்ட பலர் விசேடமாக தமிழீழத்தில் உள்ள கைக்கூலியர்கள்,ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவாக வெள்ளை வான்களை அனுப்பி படுகொலை செய்த டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றவர்களின் கனவுகள் கலைந்து விட்டதாக பிரான்ஸில் இருக்கும் மனித உரிமைகள் இல்லத்தின் இயக்குநரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவளித்து குற்றங்களில் இருந்து வெளியில் வந்தவர்கள் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வந்துவிட்டார் இனி சரித்திரம்,வாழ்நாள் ஆளுமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கையில் தான் என கற்பனையில் வாழ்ந்தனர். இவை தற்போதைய நெருக்கடி நிலையில்,கனவாகியுள்ளது.
இருப்பினும் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த போது அவர் பெரியளவில் அநியாயங்களை மேற்கொள்ள போகின்றாரென பயந்தவர்கள் அதிகம் எனவும்,இவ்வாறான நிலையில் தற்போதைய சூழ்நிலையினை சரியான முறையில் கையாண்டால் இலகுவில் வெற்றி பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 6 நாட்கள் முன்
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam