நாட்டை நாசமாக்கிய இரண்டு ராஜபக்சர்கள்: சந்திரிகா குற்றச்சாட்டு-செய்திகளின் தொகுப்பு
இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, இரண்டு ராஜபக்சர்களின் ஆட்சிகளின் போது மேற்கொள்ளப்பட்ட ஊழல்களின் விளைவாகும் என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“இலங்கையில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஒரே வழி ஒரு சமூக-அரசியல் எழுச்சி புரட்சியாகும். இலங்கை திவாலானமைக்கு ராஜபக்ச குடும்பம் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் ஊழல்களே காரணமாகும்.
ராஜபக்சர்களின் ஆட்சி

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் ராஜபக்சர்களின் கட்சியை நம்பியிருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்க எவ்வாறு செயற்படுகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இலங்கையில் கடந்த மாதங்களில் இடம்பெற்ற போராட்டங்கள்,உண்மையிலேயே உற்சாகமாக இருந்தன. போராட்டக்காரர்களின் கோரிக்கையின்படி, புதிய முகங்கள் மற்றும் சரியான தொலைநோக்கு பார்வை கொண்ட புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர வேண்டும்.
போராட்டக்காரர்கள் என்னை சந்தித்தபோது, அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் சில நல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவையை அமைப்பதற்கு ஒரு இடைக்கால ஏற்பாட்டை நான் பரிந்துரைத்தேன்.”என சந்திரிகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri