ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் 5 பக்கங்களில் ராஜபக்ச துதிபாடல்! - சட்டத்தரணி நாமல் ராஜபக்ச
நீதிமன்றம் சுதந்திரமாக இயங்கினால் பொலிஸ் விசாரணைகளில் தலையீடுகளும் இல்லை, ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமிக்க வேண்டிய எந்த தேவையும் இல்லை என சட்டத்தரணி நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
1978ஆம் ஆண்டிற்கு பின்னர் நியமிக்கப்பட்ட அனைத்து ஜனாதிபதி ஆணைக்குழுக்களும் அந்தந்த ஆட்சியாளர்களின் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக மாத்திரமே நியமிக்கப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார்.
உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சட்டத்தரணி நாமல் ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்களின் பல மில்லியன் ரூபாய் பணத்தை செலவிட்டு நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கையில் ஐந்து பக்கங்களில் முழுமையாக ராஜபக்சவினரை துதிபாடியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




