ராஜபக்சர்களின் கோடிக்கணக்கான மோசடியை மறைக்க சதித் திட்டம்
ராஜபக்சர்களால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடியை மூடிமறைக்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்சர்களின் பெருந்தொகை கறுப்பு பணம் உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அத்துடன் வெளிநாடுகளில் ஹோட்டல்கள் மற்றும் அதிசொகுசு கார்கள் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் உள்ளன.
கடந்த ஆட்சியின் போது பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டு நாட்டை வங்குரோந்து நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
ராஜபக்சர்களின் மோசடி
இந்நிலையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவ்வாறான குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கும் நடவடிக்கையை பசில் மேற்கொண்டு வருகிறார்.
அதற்கமையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன “சூரிய சந்திரனும் உண்மையையும் மறைக்க முடியாது” என்ற புதிய வேலைத்திட்டத்தை நாடு முழுவதும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
ராஜபக்சர்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க ஒரு குழுவை நியமிப்பதே அடிப்படை திட்டமாகும்.
தேர்தல் இலக்கு
பசில் ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய பிரதம செயலாளர் சாகர காரியவசவினால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு 300 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்கான பயிற்சி பட்டறையை நடத்தவும் கட்சி தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
