உற்பத்தி திறன் மாதிரி கிராமமாக ராஜ கிராமம்
Clean ஸ்ரீலங்கா தேசிய திடடத்திற்கு இணையாக செயல்படுத்தப்படும் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்டம் 2025-2026 தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராம திடடத்தின் கீழ் மீள கட்டி எழுப்ப பட இருக்கின்ற ராஜ கிராமத்தின் செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் திருமதி உமாமகள் தலைமையில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கபட்டத்தை தொடர்ந்து மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன இடம்பெறறன.
அதனை தொடர்ந்து சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்டம் 2025-2026 தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராம திட்டத்திற்கான பெயர் பலகையினை யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் திரை நீக்கம் செய்து வைத்தார்.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri