மட்டக்களப்பில் மழையுடனான காலநிலை: வாகன சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்
மட்டக்களப்பில் மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக வாகன சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் நேற்று(15) இரவு வாகனம் ஒன்று வீட்டு மதிலை உடைத்துக்கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியூடாக குருணாகலில் இருந்து அம்பாறை மருதமுனைக்கு சென்றுகொண்டிருக்கும்போதே வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலை உடைத்துக்கொண்டு சென்றுள்ளது.
மருதமுனை வெதுப்பகம் ஒன்றிற்கு சொந்தமான குறித்த வாகனத்தில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணை
இந்த விபத்து காரணமாக வீட்டு மதிலும் வீட்டின் சில உடமைகளுக்கும் சேத மேற்பட்டுள்ளதுடன் லொறியின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இப்பிரதேசத்தில் மழையுடனான வானிலை நிலவி வரும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam