வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை குறித்து எச்சரிக்கை

Climate Change Eastern Province Northern Province of Sri Lanka Weather
By Erimalai Nov 13, 2025 10:36 PM GMT
Report

கடந்த 08.11.2025 அன்று எதிர்வுகூறியபடி வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது இலங்கைக்கு தென்கிழக்காக இலங்கைக்கு அருகில் காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 15.11.2025 வரை தொடரும். 

ஐரோப்பாவிலுள்ள உறவினரின் சொத்தினை வைத்து இலங்கையில் சூதாடிய நபரின் பரிதாப நிலை

ஐரோப்பாவிலுள்ள உறவினரின் சொத்தினை வைத்து இலங்கையில் சூதாடிய நபரின் பரிதாப நிலை

பல பகுதிகளுக்கு எச்சரிக்கை 

மீளவும் ஒரு காற்றுச் சுழற்சி எதிர்வரும் 17.11.2025 அன்று வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் உருவாகும். அது கிழக்கு மாகாணத்திற்கு அருகாக நிலை கொள்ளும். இதனால் மீளவும் எதிர்வரும் 17.11.2025 முதல் 22.11. 2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை குறித்து எச்சரிக்கை | Rain To Continue Northern And Eastern Provinces

அதன்பின் மீளவும் எதிர்வரும் 21.11.2025 அன்று இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே மாநிலத்திற்கருகே வங்காள விரிகுடாவில் ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது.

இது தீவிரம் பெற்று ஒரு புயலாக மாறும் வாய்ப்புள்ளது. இந்த புயலினால் எதிர்வரும் 22.11.2025 வரை இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் மிக கன மழை பெறும் என்பதோடு கடற்பகுதிகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் பலத்த வேகத்தில் காற்று வீசிக் கூடும்.

இந்த புயலுக்கு சென்வார் எனப் பெயரிடப்படும். இதனால் எதிர்வரும் 23.11.2025 முதல் 28.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எனவே தற்போது கிடைக்கும் மழை ஒரு சில நாட்கள் தவிர்த்து எதிர்வரும் 28.11. 2025 வரை தொடரும். குறிப்பாக நவம்பர் 17 முதல் 28 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக்கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

2026இலும் மழை..

இவ்வாண்டு வடகீழ்ப் பருவமழை என்பது 2026 பெப்ரவரி வரை நீடிக்கும். ஆனால் ஒக்டோபர் மாதத்தின் இறுதியிலும் நவம்பர் மாதத்தின் ஆரம்பத்திலும் மழையில்லாததனால் பலர் இம்முறை வடகீழ்ப் பருவமழை பொய்த்து விட்டதாக கூறுகிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை குறித்து எச்சரிக்கை | Rain To Continue Northern And Eastern Provinces

இவ்வாண்டு நவம்பர் மாதத்தின் பினனரைப்பகுதியிலும் டிசம்பர் மாதம் முழுவதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பல நாட்கள் மழை நாட்களாக இருக்கும் என்பதோடு கணிசமான அளவு மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது .

 குறிப்பாக டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இந்து சமுத்திர பகுதிகளுக்கு முக்கியமாக வங்காள விரிகுடாவிற்கு மேடன் ஜூலியன் அலைவின் வருகை அமையும் என்பதனால் டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

அதே போல் ஜனவரி 2026 இலும் 11 நாட்கள் மழை நாட்களாக அமையும். ஆகவே இம்முறை வடகீழ்ப் பருவமழை சராசரியை விட சற்று அதிகமாகவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளாரை்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த திருமாவளவன்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த திருமாவளவன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US