வடக்கு, கிழக்கில் மீண்டும் கனமழை: விவசாயிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் மிதமானது முதல் சற்று கனமானது மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று(18.012026) வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு வளிமண்டலத்தில் உறுதியற்ற தன்மை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இதேவேளை, இந்த காலப்பகுதியில் மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கும் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விவசாயிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நெல் அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகளும், அறுவடை செய்த நெல்லை உலர விடும் விவசாயிகளும் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், வெங்காயம் மற்றும் மரக்கறிச் செய்கையாளர்களும் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொள்வது சிறந்தது.
அத்துடன், தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் குளிரான நிலைமை அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரித்துக் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam